இந்தியாவின் ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 2 பேரின் செல்போனில் 120 வீடியோக்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டு பேரையும் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், கடலில் நீராடிவிட்டு, அதன் அருகே இருந்த உடை மாற்றும் அறைக்கு உடைகளை மாற்ற சென்றனர்.
டீக்கடையுடன் கூடிய உடைமாற்றும் அறைக்கு சென்ற இளம்பெண், அறையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ்களை உற்றுநோக்கியபோது சந்தேகமடைந்தார். அதை சோதனை செய்த போது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கேமராவை கைப்பற்றியதுடன், தனது தந்தையிடம் உடனடியாக விவரத்தை தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அங்கு சோதனை செய்த காவலர்கள் அங்கிருந்த 3 அறைகளிலும் தலா ஒரு கேமரா இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து அந்த தோஷத்தை கழிக்க ரமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு 21 நாழிக் கிணறுகளில் தீர்த்த குளியல் மேற்கொண்டு சிவனுக்கு பூஜை செய்ததாக ஐதீகம் சொல்கிறது. இத்தனை வரலாற்று சிறப்பு மிக்க ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் வருகை தருவது வழக்கம். அப்படிப்பட்ட புனித தீர்த்த ஸ்தலத்தில் அரங்கேறிய அவலச் செயல் தான் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.