கம்பளை – குருந்துவத்தை நகரில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் வேனொன்று பிரேக் இல்லாமல் அங்கிருந்த ஊழியர் மீது மோதிய சம்பவம் CCTV கமெராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
விபத்தில் காயமடைந்த ஊழியர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.