கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி.!

0
116

முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.

மேலும், அந்த நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மற்றுமொரு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here