இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும், அவரது மனைவியும் நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இருந்து ஒருவர் மற்றொருவரின் புகைப்படங்களையும், தங்களின் திருமண புகைப்படத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நீக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
மும்பையின் ஜூஹூ கடற்கரைக்கு அருகே உள்ள ஜே.டபிள்யூ மேரியட்டில் ஒரு இளம்பெண்ணுடன் சாஹல் காணப்பட்ட புகைப்படங்கள் வைரலான அடுத்த சில மணி நேரத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை தனஸ்ரீ நீக்கியுள்ளார்.
முன்னதாக சாஹல் மற்றும் வர்மாவின் சமூக ஊடக கணக்குகள் இருவரின் அன்னியோன்யத்தையும், ஒற்றுமையின் தருணங்களையும் எடுத்துக்காட்டும் விதமான புகைப்படங்களால் நிரம்பி இருந்தது. ரசிகர்கள் இவர்கள் இருவருமே ஆசிர்வதிக்கப்பட்ட தம்பதியர் என்று கொண்டாடினர்.
கடந்த சில மாதங்களாகவே இவர்களின் உறவில் விரிசல் விழுந்திருப்பதாக யூகங்கள் வெளியான நிலையில், இருவருமே இது குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
ஜே.டபிள்யூ மேரியட்டில் ஒரு இளம்பெண்ணுடன் சாஹல் காணப்பட்டபோது இவர்களது விவாகரத்து குறித்த பேச்சுகள் வலம் வர துவங்கின. அடுத்தடுத்து அந்த இளம்பெண்ணுடன் சாஹல் பொது வெளியில் செல்வது, கண்ணில் படுவதை விட அதிகமாக இருக்கிறதா என்று பலரையும் யோசிக்க வைத்தது. வர்மா சாஹலுக்குப் பக்கத்தில் இல்லை என்பது இந்த ஜோடி பிரிவை நோக்கிச் செல்லக்கூடும் என்ற யூகத்தை மேலும் அதிகரித்திருந்தது.
எனினும் இந்த செய்திகளை இதுவரை சாஹலும், வர்மாவும் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நெருங்கிய ஆதாரங்களில் இருந்து வரும் அறிக்கைகள், இந்த உறவு விவாகரத்தை நோக்கி செல்வதாகவே கணிக்கப்பட்டது.
நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா – அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவகாரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிகபட்சம் 20 கோடி ரூபாய் வரை தனஸ்ரீ கேட்க வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகின்றது.