வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.
அதன்படி, இன்று காலை வரை 8 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குறித்த வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.