கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பணிபுரியும் பெண்களிடம் புதுச்சேரிக்கு செல்ல இருப்பதால் அதிகாலையில் வீட்டிற்கு வேலைக்கு வரும்படி கூறிய நிலையில் அதில் ஒரு பெண் சீக்கிரம் வந்துவிட்டார்.
அவர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் கதவு திறக்காததால் அந்த பெண் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு சிறுமி பிரியங்கா மற்றும் மற்றொரு குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்ததையும் கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லை. இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இரவு தன்னுடைய தம்பிக்கு அனுப்குமார் ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். மேலும் கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது குழந்தையின் மருத்துவ செலவு உட்பட பல்வேறு காரணங்களால் கடன் தொகை அதிகரித்திருக்கலாம் எனவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.