தேவையற்ற மேலதிக உபகரணங்களை அகற்ற தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 3 மாத கால அவகாசம் !
பஸ்களில் உள்ள தேவையற்ற மேலதிக உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.