வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற மற்றுமொரு சொகுசு பஸ் விபத்து, ஒருவர் உயிரிழப்பு.
ஏ9 வீதியில் மதவாச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் பிரதேசத்தில் இன்று (08) காலை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 58 வயதுடைய நபர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
திடீரென வீதியில் புகுந்த மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் மோதியதில் 20 வயது இளைஞன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.