முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவதியுறும் நோயாளர்கள்..!

0
78

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயளர்களுக்கான சரியான இடவசதி இல்லாத நிலையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை அண்மை நாட்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்-2) பெண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்-1) காணகப்படுகின்றது, இரண்டு விடுதிகளிலும் சுமார் 60 பேர் வரையிலேயே தங்கி நின்று சிசிக்சை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது,

இந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மருத்துவ விடுதிகளில் போதிய இடவசதி இல்லாத நிலையினால் நிலத்திலும் கட்டிடங்களின் ஓரங்களிலும் நோயளர்கள் படுத்து உறங்கும் நிலையினை காணக்கூடியதாக இருகின்றது.

இந்த இரண்டு மருத்துவ விடுதிகளும் தங்காலிக மருத்துவ விடுதிகளாகவே கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள மெத்தைகள் நோயாளர்களுக்கு போதா நிலை காணப்படுகின்றது.

போருக்கு முன்னர் 110 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளபோது நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ விடுதிகள் இரண்டு தrகாலிகமாகவே கட்டப்பட்ட நிலையில் இதுவரை மாற்று வழி எதுவும் முன்னெடுக்கப்படவில்லை, மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் நோயாளர்கள் கட்டிடத்தின் ஓடைப்பகுதிகளில் நோயாளர்கள் படுத்து உறங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ விடுதிகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதும் அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததாக இல்லை, ஆனால் ஏனைய மருத்துவ சிகிச்சை மற்றும் ஏனைய வசதிகள் மாவட்ட மருத்துவனைக்கு சரியாக இருந்தும் நோயாள்களுக்கான மருத்துவ விடுதி சரியாக இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் நோயளர்கள் பெரும் அவதியினை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ விடுதி தொடர்பில் வடமாகாண ஆளுனர் கவனத்தில் எடுத்து இனிவரும் காலங்களில் நிதந்தர மருத்துவ விடுதிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது நோயாளர்களின் எதிர்பார்பும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here