சபாநாயகருக்கு அர்ச்சுனா MP கடிதம்..!

0
4

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

‘இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here