முல்லைத்தீவு – கேப்பாபிலவில் தங்கவைக்கப்பட்ட மியன்மார் அகதிகள் இருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதி.முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வராங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அதிககளில் இருவர் உடல்சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று 09.01.2025 அதிகாலை வேறை குறித்த அகதிகளில் இருவருக்கு வயிற்று வலிகாரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
33 அகவையுடைய பெண் ஒருவரும் 12 அகவையுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் பொலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.