முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதற்கான நிபந்தனைகள்..!

0
36

பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன.

அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு பேசும் பொருளாக மாறியுள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு எந்தவித நவீனமயமாக்கலும் செய்ய முடியாதா?

‘க்ளீன் சிறிலங்கா’ திட்டம் அமுல்படுத்தப்படும் சூழலில், பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் மேலதிக உதிபாகங்களை பொறுத்தி இயங்கும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பொலிஸார் சோதனையிடுவதை சில தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அலங்கார பாகங்கள் கூட பொலிஸாரினால் நீக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சில அலங்காரங்களை மேற்கொள்ள மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.

ஆனால் இது பல அளவுகோல்களின் கீழ் செய்யப்படலாம். சில அலங்காரங்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

15 நிபந்தனைகளின் கீழ் முச்சக்கர வண்டிகளை நிறுவுதல் மற்றும் அலங்கரிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் கீழ்…

* வீதியை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து அல்லது இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கரவண்டியின் பின்புறம் கூர்மையான விளிம்புகள் இல்லாத ஏணியை அலங்கார நோக்கங்களுக்காக மட்டு ரூ.1,000 கட்டணம் செலுத்தி பொருத்திக்கொள்ள முடியும்.

* முகப்பு விளக்குகளுக்கு பதிலாக LED விளக்குகள் பொருத்துவதற்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பொருத்துக் கொள்ளலாம். மேலும் முகப்பு விளக்குகளின் இருபுறமும் சிக்னல் விளக்குகள் மற்றும் பார்க்கிங் விளக்குகள் ஆகியவற்றையும் பொருத்தலாம்.

ஆனால் அங்கு வாகனத்தின் அகலம் வரம்பை மீறக்கூடாது.

* முச்சக்கரவண்டியின் கண்ணாடிக்கு மேலே சூரிய ஒளிக்கவசத்தை நிறுவுவதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

* முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் மட்கார்டுக்குப் பதிலாக உலோகத் தகடு மட்கார்டை நிறுவலாம்.

* பக்கவாட்டு கண்ணாடிகள் மோதினால் பின்னோக்கி செல்லும் வகையில் அமைக்க வேண்டும்.

மேலும், இரண்டு விண்ட் டிஃப்ளெக்டர்களை இடது மற்றும் வலதுபுறத்தில் நிறுவ முடியும் என்றாலும், அவை பக்க கண்ணாடிகளின் வரம்புகளிலிருந்து விலகக்கூடாது மற்றும் கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருக்கக்கூடாது மற்றும் உலோகப் பொருட்களால் செய்யப்படக்கூடாது.

* முன் உடலின் கீழே பொருத்தப்பட்ட அனைத்து பாகங்களும் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் போன்ற இலகுரக பொருட்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

* நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியை வெள்ளை இரும்பு உலோகத்தால் செய்யலாம், ஆனால் அது துருத்திக்கொண்டிருக்கும் வடிவங்கள் மற்றும் ஆபத்தான வடிவங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here