சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட டென்னிஸ் பந்தொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இனந்தெரியாத நபரொருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (07) மாலை காலி சிறைச்சாலைக்குள் கூரை வழியாக டென்னிஸ் பந்தொன்றை வீசியுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் டென்னிஸ் பந்தை சோதனையிட்டுள்ளனர். டென்னிஸ் பந்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.