யாழில் மண்ணெண்ணெய் அருந்திய குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!

0
33

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெய்யை எடுத்துக் குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததது. இதை அவதானித்த தாயார் குழந்தையைத் தூக்கினார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது.

பிற்பகல் ஒரு மணியளவில் அந்தக் குழந்தை கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே உங்கள் வீட்டில் மண்ணெண்ணெய், பெற்றோல், பூச்சி நாசினிகள், மருந்து வகைகள் போன்ற பொருட்களை குழந்தைங்களின் கண்ணில் படும் இடங்களின் இருந்து எட்டி வையுங்கள். மற்றும் குழந்தைகளை எப்போதும் உங்கள் கண்கானிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here