மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் நேற்று முன் தினம் புதன் கிழமை தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபானகல பகுதியை சேர்ந்த எதிரிமன்னகே கவீஷ லக்மால் (வயது – 15) என்ற மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்…
குறித்த மாணவன் அதே பகுதியில் உள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த நிலையில் உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம், பாடசாலை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை மாணவனின் தந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.