அநுராதபுரம் மாவட்டத்தின் கலேன்பிந்துனு வெவ பகுதியில் உள்ள அளுத்திவுல்வெவ குளத்தின் கரை சேதமடைந்துள்ளதால், அப்பகுதியிலிருந்து 30 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, அளுத்திவுல்வேவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததால், இன்று (10) காலை நீர்த்தேக்கத்தின் மதகு அருகே மண்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, இன்று காலை முதல் நீர் கசிவு ஏற்பட்டு, தற்போது பெரிய நீர்நிலையாக மாறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தற்போதைய சூழ்நிலையில், திவுல்வெவ மகா வித்தியாலயத்தை இன்று மூடவும், கலென்பிந்துனுவெவவிலிருந்து துட்டுவெவ யக்கல்ல வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தை நிறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், இதனால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க, பொலிஸார், இராணுவம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இன்று காலை முதல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்த போதிலும் வௌியெறும் நீரை நிறுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.