நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றால் உதவித்தொகை.. அறிவித்த பிரபல நாடு.!

0
1

உலக மக்கள் தொகை கணக்கெடுப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 7.6 மில்லியன் ஆகும். சமீபத்தில் எடுத்த கணக்கின்படி 8.2 பில்லியன் உயர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உலக மக்கள் தொகையில் இந்தியா முதலாவதாக இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருந்த ரஷ்யாவில் அதிக அளவு போர் நிலவி வருவதால் ரஷ்ய மக்கள் வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகிறார்கள். இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, 25 வயதுக்குட்பட்ட பெண்கள் நல்ல முறையில் குழந்தைகள் பெற்றெடுக்க அரசு உதவித்தொகை வழங்குகிறது. நல்ல முறையில் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்தால் மகப்பேறு உதவித்தொகையாக 100,000 ரூபிள் (இலங்கை மதிப்பில் ரூ. 2,75,000) அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேபோன்று இரண்டாவது குழந்தையும் நல்ல முறையில் பெற்றெடுத்தால் INR ரூபாய் 8,130 உதவித் தொகையாக வழங்கப்படும். கடந்த 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முதல் 6 மாதத்தில் 6 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இருந்தும் போர் காரணமாக ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு மக்கள் தொகை குறைந்துள்ளது. எனவே இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் மக்கள் தொகை அதிகரிப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here