படுக்கையில் உல்லாசமாக இருந்த மாமனார், மருமகள் – நேரில் பார்த்த மாமியாரருக்கு நேர்ந்த சம்பவம்.!

0
11

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் கீதா தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 50 வயது ஆகும் நிலையில் கணவன் மற்றும் தீபக் என்ற ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் தீபக்குக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இதில் கீதா தேவியின் கணவர் குர்கு யாதவுக்கும் மகனின் மனைவிக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கீதா தேவி வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் மாமனாரும் மருமகளும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையில் சம்பவ நாளில் மருமகளும் மாமனாரும் படுக்கையில் ஒன்றாக உல்லாசமாக இருந்த நிலையில் திடீரென வீட்டிற்கு வந்த கீதா அதனை நேரில் பார்த்துள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய மகனிடம் சொல்ல போவதாக கீதா கூறிய நிலையில் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து கீதாவை கொலை செய்தனர்.

மருமகள் தன் மாமியாரை மரக்கட்டை மற்றும் செங்கல் போன்றவைகளால் தாக்கி கொலை செய்த நிலையில், பின்னர் பிணத்தை வீட்டின் கழிவறை தொட்டியில் மறைத்து வைத்துள்ளனர். தன் கணவனிடம் மாமியார் அடையாளம் தெரியாத ஒருவருடன் சென்று விட்டதாக கூறிய நிலையில் நீண்ட நாட்களாக கீதா வீட்டுக்கு திரும்பாததால் மகன் சந்தேகத்தில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியதில் சடலம் கழிவறை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது மாமனாரும் மருமகளும் குற்றத்தை ஒப்புக்கொள்ள தாங்கள் இருவரும் கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அதற்கு மாமியார் கீதா தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த செய்தி சிலரை சங்கடப்படுத்தினால் நாங்கள் வருந்துகிறோம், ஆனால் இந்த உலகில் இப்படியான சம்பவங்களும் நடக்கின்றனவே என்பதற்காகவே இந்த செய்தியை தந்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here