ஜனவரி 11 ஆம் திகதி சனிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
53

மேஷம்:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம்:
அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிதுனம்:
தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். காலையிலேயே கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைக்கக்கூடும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும்.

கடகம்:
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உடல் நலனில் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அலு வலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரித்து மகிழ்ச்சி தரும்.

சிம்மம்:
அரசாங்க அதிகாரிகளின் ஆதரவால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

கன்னி:
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தேவையற்ற செலவுகள் எது வும் ஏற்படாது. ஆனால், மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்:
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும்.பணப்புழக்கம் உற்சாகம் தரும். தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

விருச்சிகம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர் களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

தனுசு:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

மகரம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற் படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கும்பம்:
தெய்வ அனுக்கிரகத்தால் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் பெருக்கெ டுக்கும். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

மீனம்:
மனதில் தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here