இறக்குமதி செய்யப்படும் வாகன வரி தொடர்பில் வௌியான தகவல்..!

0
22

வாகனங்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய இறக்குமதி வரி சுமார் 300% ஆகும். அதற்கமைய மேற்படி வரியானது எதிர்காலத்தில் 400% அல்லது 500% வீதத்திற்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாகனங்களின் விலை உயர்வுக்கு வற் வரி உள்ளிட்ட ஏனைய 3 வகையான வரிகள் உள்ளடக்கப்படுகின்றமையே காரணமாகும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

கேள்வி – தற்போதைய விலையை விட எத்தனை சதவீதமாக விலை அதிகரிக்கும்?

வரி விகிதம் 400% அல்லது 500% ஆக அதிகரிக்கலாம். சில வாகனங்களுக்கு, இந்த உயர்வு 600% வரை இருக்க வாய்ப்புள்ளது.

கேள்வி – தற்போது சந்தையில் உள்ள வாகனங்களும் இதே முறையில் அதிகரிக்குமா?

தற்போதைய வாகன சந்தையை விட விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேள்வி – வாகனங்கள் வாங்கும் விடயத்தில் மக்களுக்கு நம்பிக்கை கொள்ள முடியாதா?

மக்கள் குழப்பமடைய தேவையில்லை. முதலில் வாகனங்கள் நாட்டுக்கு வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவில் இருந்தபோது, ​​மோட்டார் வாகனங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி, கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் மேம்பட்டதாலும், பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஒப்பந்தத்துடன், வாகன இறக்குமதி தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 2024 செப்டம்பர் 12 நடைபெற்ற அரசாங்க அமைச்சரவையின் அனுமதிக்க அமைவாக, மூன்று கட்டங்களின் கீழ் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வருடம் பெப்ரவரி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், மோட்டார் வாகன இறக்குமதிக்கான புதிய வரி திருத்தங்களை உள்ளடக்கிய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வருகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மூலம் இயங்கும் மற்றும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கலால் வரி, வாகனத்தின் சிலிண்டர் திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் மூலம், VagonR காரின் வரி சுமார் ரூ.1.6 மில்லியனாக இருந்தது, ஆனால் அது தற்போது 1.8 மில்லியனை தாண்டக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 மில்லியன் ரூபாவாக இருந்த விட்ஸ் காரின் இறக்குமதி வரி, சுமார் 2.4 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here