பாடசாலை மாணவி கடத்தல் தொடர்பில் வெளியான தகவல்.!

0
38

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சி.சி.டி.வி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே இந்த சிறுமியை கடத்தியுள்ளார் என்றும், அவ்விருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இணக்கத்தை இருவீட்டாரும் முதலில் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமியின் தந்தை பின்னர் விருப்பமின்மையை தெரிவித்துள்ளார். இதனால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று ​அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வேனின் சாரதி தவுலகல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்குரிய வேனின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடத்திச் சென்ற இளைஞனை கைது செய்வதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here