வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் களுவாஞ்சிகுடி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் பொறுப்பேற்றனர். பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.