பின்னவல பொலிஸ் பிரிவின் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பகுதியில் பாதுக்க திசையிலிருந்து சீலகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கொங்ரீட் தூணில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பலாங்கொடை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.