கந்தளாயில் 60 இலட்சத்திற்கு அதிக தங்கம், பணத்தை கொள்ளையிட்ட 4 பேர் கைது.!

0
8

வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சந்தேக நபர்கள் நால்வரை கந்தளாய் வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

சந்தேக நபர்கள் இரவு நேரத்தில் வீடொன்றிற்குள் புகுந்து, 6.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள தங்கப் பொருட்களையும், 267,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதற்கமைய, கந்தளாய் வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கடந்த 11 ஆம் திகதி கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாக, கம்பளை மற்றும் சம்பூர் பகுதிகளில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சில தங்கப் பொருட்களையும், குற்றச் செயலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர், கிளிவெட்டி மற்றும் கம்பளை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸாரும், வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here