கணவனை நம்பி தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற மனைவிக்கு நேர்ந்த சம்பவம்.!

0
162

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. அவரது கணவர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். அவர்கள் மூவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு விடுமுறைக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், தாய்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பிரியங்கா சர்மா மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரியங்காவின் தந்தை சத்யநாராயண் சர்மா, அவரது கணவர் ஆஷிஷ் பிரியங்கா சர்மாவை கொலை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆஷிஷ் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகவும், திருமணமானதிலிருந்து பிரியங்காவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (பிரதி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here