இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.
பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும்.
பலவிதமான வண்ணங்களில் பட்டம் செய்து அதை பறக்க விடும் பொழுது நாமே பறப்பது போன்ற பரவசமும், மகிழ்ச்சியும் ஏற்படும். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இன்று (14) இடம்பெற்றது.
இந்த வல்வை பட்டத்திருவிழாவில் ஜனாதிபதி, மற்றும் தளபதி விஜய் படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்கள் அனைவரையும் கவர்ந்து காணப்படுள்ளது.
பட்டப் போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டதுடன் பெருமளவான மக்களும் கூடினர். Video – Valvai sulax