காதலா.? கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறிய உண்மை..!

0
27

அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிக்கும், கடத்திய சந்தேகநபருக்கும் இடையில் காதல் உறவுகள் எதும் இல்லை என கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மாணவியும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரை இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், மாணவியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, ஊடகங்களிடம் பேசுகையில்,

தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று கூறினார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் மற்ற இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிய தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here