அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு.!

0
17

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் சிறியளவான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் குருநாகல், பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறுகையில…

1. எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளது.

3. கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை, கந்தளாய், வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம் குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

4. வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.

5, இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை கிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

7. முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (16/17) மழை சற்று குறைவாக இருக்கும்,

8. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here