கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஹானா மும்தாஜ் (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் சஹானாவுக்கு மறையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் உடன் திருமணம் நடந்தது.
திருமணமான 20 நாட்களுக்கு பிறகு அப்துல் துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் சஹானா தனது மாமியார் வீட்டில் இருந்தார். அவரை கணவரும், குடும்பத்தினரும் மன ரீதியாக சித்தரவதை செய்துள்ளனர். மேலும் சஹானாவுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது என கூறி வீடியோ கால் மூலம் கணவரும், அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
மேலும் அப்துல் விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனை அறிந்த சஹானாவின் பெற்றோர் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கணவர் வீட்டில் விட்டனர். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சஹானாவை அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சஹானாவில் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (பிரதி)