ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளிலும் நவகிரங்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவுகளில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கை முழுவதும் அதிக பணபிரச்சினைகளை சந்திப்பார்களாம்.
இவர்களுக்கு நிதி ரீதியியான சிக்கல்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்களால் செலவை கட்டுப்படுத்தவே முடியாது. இவர்களின் இந்த குணம் இவர்களுக்கு அடிக்கடி பணப்பிரச்சினையை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்களை கண்மால், கையில் இருக்கும் பணத்தை முழுமையாக அதில் செலவிட்டு பின்னர் மற்றவர்களிடம் கடன் கேட்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பதால், இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதால், தங்களின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள ஆடம்பர பொருளில் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணத்தால் பெரிய நிதி பிரச்சினைகளில் அடிக்கடி மாட்டிக்கொள்வார்கள். இந்த பிரச்சினை இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் மனகிளர்ச்சியால், ஆடம்பர செலவுகளுக்காக அதிகம் கடன் வாங்கும் பழக்கம் இவர்களுக்கு இருக்கும். மிதுன ராசியினரின் பயணத்தின் மீதான மோகம், பொழுதுபோக்குகளில் அதிக செலவு ஆகியவற்றின் காரணமாக வாழ்க்கை முழுவதும் பணதுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.