ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன்படி, நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
மேலும், பிரதிவாதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்து, பணம் மற்றும் தங்கப் பொருட்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.