இன்று (15) மாலை அகுருவல்ல பிரதான வீதியில் கணித்தபுர 1 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அவசரமாக முந்தி சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியைக் கண்ட வேனின் சாரதி, அவரைக் காப்பாற்றுவதற்காக வீதியிலிருந்து விலகி பள்ளத்துக்குள் விழுந்ததில் வேனில் பயணித்த 7 பேர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உள்ளிடோர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.