கணவனின் நண்பனுக்கு தனது படங்களை அனுப்பிய மனைவிக்கு நேர்ந்த சம்பவம்.!

0
256

இந்தியாவின் கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நிர்வாண படங்களை காண்பித்து, நபர் ஒருவர் ரூ.1 இலட்சம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது.

மீராவின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது கணவரின் நண்பர் கதிர் என்பவர் சமூக வலைத்தளம் மூலமாக மீராவிடம் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ள நிலையில், மீரா தனது நிர்வாண புகைப்படங்களை கதிருக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மீராவின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட கதிர், உனது நிர்வாண புகைப்படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன மீரா கதிருக்கு ரூ.1 இலட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும், கதிர் கூடுதலாக பணம் கேட்டு மீராவை மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மீரா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மீரா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காட்டூர் பகுதியில் வசித்து வரும் கதிரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். (பிரதி)

இந்த செய்தி ஒரு விழிப்புணர்வுமிக்க பதிவாக இங்கு பகிரப்படுகின்றது. தற்போது இருக்கும் சூழலில் எது.. எப்போ.. என்ன நடக்கும்.. என்று எதிர்வு கூற முடியாது.. வாழும் வாழ்க்கையை கவனமாக வாழுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here