அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, வறிய குடும்பம் ஒன்றிற்காக வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 8,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
2,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்காக 5000 ரூபாவை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5,000 ரூபாய் வழங்கப்படும் குடும்பங்களுக்கான கொடுப்பனவை மாற்றமின்றி தொடர அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே. இந்த மாதத்திற்கான கொடுப்பனவு கட்டாயம் உங்களுக்கு உங்களுடைய வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும். இந்த மாதம் இறுதிக்குள் உங்களுடைய அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.