மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். நடிகர் சைஃப் அலி கான் இன்று ஜனவரி 16ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை தனது பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை முயற்சியின் போது படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை 2:30 மணிக்கு கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.