நுளம்புக்குப் புகை மூட்டி விட்டு படுத்த மூதாட்டி தீப்பிடித்து உயிரிழப்பு.!

0
20

நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா (வயது-81) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்குப் பொச்சு மட்டையில் தீ வைத்தபோது அவரது சேலையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here