இன்றைய தினம் (16.01.2025) தங்காலை – வீரகெட்டிய வீதியின் 3வது மைல் கல் பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வலஸ்முல்லயிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த ஒரு பஸ் மற்றொரு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணைகளிலிருந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பஸ்களின் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.