இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்.. காசாவில் போர் நிறுத்தம்..!

0
19

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்டு டிரம்ப், வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கினால்தான் இது அமலுக்கு வரும். எனினும் இது வருகிற நாட்களில் நடந்துவிடும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here