யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது.!

0
66

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து, மாணவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸார் அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here