இன்று (17) காலை 5.00 மணியளவில் மத்தள நோக்கி பயணித்த வெளிநாட்டினர் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து (மினி பஸ்), ஒன்று சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 12 வெளிநாட்டினர் காயமடைந்தனர். குறித்த பேரூந்தில் 30 வெளிநாட்டவர் இருந்ததாக கூறப்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 138வது கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. (accident1st)