அனைவரையும் சிரிக்க வைத்த பிரபல யூடியூபர் விபத்தில் மரணம்.!

0
8

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (வயது 27). யூடியூப், இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணியின் மகளை மணந்தார். விடுமுறை நாளில் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் ஈரோட்டிலிருந்து கவுந்தப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அவரது இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. தலையில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராகுல் தலைக்கவசம் அணியாமல் இருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தது நெட்டிசன்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here