பள்ளியில் நடந்த சம்பவம்.. மாணவியியை நி.ர்.வா.ண.மா.க்.கி வீடியோ எடுத்த மாணவர்கள்.!

0
2

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. 10 ஆம் தேதி வழக்கம் போல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்குச் சென்றார். ஓய்வு அறையில் தனிமையில் மாணவி அமர்ந்திருந்த நிலையில், ​​7 மாணவர்கள் திடீரென அங்கு வந்து மாணவியின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக படம் பிடித்தனர். மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மிரட்டினர். இருப்பினும், அவர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இதை அறிந்த மாணவி அதிர்ச்சியடைந்து தனது தந்தையிடம் நடந்ததைச் சொன்னார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வகுப்பறையில் தனது மகளுக்கு நடந்த இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் அவரது தந்தை கூறினார்.

இதைத் தொடர்ந்து, மாணவியையும், அவரை படம் பிடித்ததாகக் கூறப்படும் 7 மாணவர்களையும் விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர். பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here