2025 ஆங்கில புத்தாண்டும் பிறந்துவிட்டது. தை மாதமும் பிறந்துவிட்டது. இதனால் மக்கள் பலரும் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வருகிறது. இந்த சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் மேஷம் முதல் மீனம் ராசிகளுக்கு ஏற்படக் கூடிய சாதக பாதகங்களை இங்கு பார்க்கலாம்.
மேஷம்: மேஷம் ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்க போகிறது. சனி உங்களுக்கு 12 ஆம் இடத்துக்கு வரப்போகிறார். அதனால் பயப்பட தேவையில்லை. ஏழரை சனியில் நடுப்பகுதி தான் பெரிய கஷ்டத்தை கொடுக்கும். அது 2027 ஆம் ஆண்டில் தான் வரப் போகிறது. கஷ்டத்தை கொடுத்தாலும் மிகப்பெரிய பலன்களுடன் எதிர்காலத்தில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். பயணம் அதிகரிக்கும். அதனால் நன்மைகளும் ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். உடல்நலனின் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்கு சனி பகவான் 11ம் இடத்துக்கு வரவுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அமைப்பு வருகிறது. அதனால் ரிஷப ராசிக்கு 2025-26 ஜாக்பாட் அடிக்கப் போகிறது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலிலும் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்: மிதுனம் ராசிக்கு சனி பத்தாம் இடத்துக்கு வரவுள்ளார். இது பெரியளவு லாப நஷ்டத்தை ஏற்படுத்தாமல் நடுநிலையான காலகட்டமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
கடகம்: கடகம் ராசிக்கு சனி ஒன்பதாம் இடத்துக்கு வரவுள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. பயணங்களால் ஆதாயம் உண்டு. சோதனைகள், வேதனைகள் முற்றிலும் விலகும். மகிழ்ச்சியான காலம் பிறக்கப் போகிறது. பணவரவு நன்றாக இருக்கும். தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை.
சிம்மம்: சிம்மம் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. எட்டாம் இடத்தில் சனி வந்தவுடன், ஏழாம் இடத்துக்கு ராகு வருகிறார். ராகு ஒன்றரை ஆண்டு அந்த இடத்தில் இருப்பதால் பெரியளவுக்கு கெடுதல் வராது. இருப்பினும் சிம்மம் ராசி எதிலும் அகலக்கால் வேண்டாம். சுப காரியங்களில் முடிவு செய்யக் கூடாது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி: கன்னி ராசிக்கு ஏழாம் இடத்துக்கு வருகிறார். ஏற்கனவே குரு ஆறாம் இடத்தில் உள்ளார். அதனால் நன்மைகளே நடக்கும். இருப்பினும் நண்பர்கள், குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவும். காதலர்களிடையே பிரிவு ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். இருப்பினும் முதலீடு சார்ந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்: துலாம் ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருவது மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. தொட்டது துலங்கும். மற்ற கிரகங்களும் சாதகமான நிலையில் தான் உள்ளன. நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். எதிரிகள் சோர்வடைந்து விலகுவார்கள். மாணவர்களுக்கும் இந்த காலம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு சனி ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். உங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். குருவின் நிலையும் சாதகமாக மாறவுள்ளது. குழந்தைகள் கல்வி, வேலை, திருமணம் காரணமாக சுப பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் – மனைவி மற்றும் காதல் உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணி மற்றும் தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிச்சயம் நிகழும்.
தனுசு: தனுசு ராசிக்கு சனி நான்காம் இடத்துக்கு வருகிறார். அதேபோல குரு மற்றும் ராகு கிரகங்களும் நல்ல நிலைக்கு பெயர்ச்சி ஆகவுள்ளன. சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள்களை வாங்க வேண்டும். தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். தாயின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மகரம்: மகரம் ராசிக்கு சனி மூன்றாம் இடத்துக்கு வருகிறார். ஏழரை சனி முற்றிலும் விலகப் போகிறது. இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கப் போகின்றன. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. கடன் சுமைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்: கும்பம் ராசிக்கு ஜென்ம சனி விலகப் போகிறது. அதனால் சோதனைகளில் இருந்து சற்று நிம்மதி கிடைக்கும். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். காதல் – திருமணம் உறவு கைக்கூடும். மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவு இருக்காது. உங்களின் எல்லா முயற்சிகளும் படிப்படியாக நிறைவேறும். சொத்துகளால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீனம்: மீனம் ராசிக்கு ஜென்ம சனி வரப்போகிறது. அதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே மோதல் உருவாகும். இருப்பினும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலனில் பிரச்னைகள் ஏற்படும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும். ஆண் – பெண் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி – (tamil.oneindia)