போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. Video

0
4

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 265 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “போர்நிறுத்த அறிவிப்பு இருந்தபோதிலும், காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை சுற்றியுள்ள சில மணிநேரங்கள் காசாவுக்கு இது “கடந்த வாரத்தில் மிகவும் ரத்தக்களரியான நாள்” என்று மஹ்மூத் பாசல் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், “ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி உள்ளது. போர்நிறுத்தம் அமலுக்கு வரும் வரை அமைதி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பாலஸ்தீன பொதுமக்களை கொன்றது குறித்து எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here