யாழில் நகைக் கடையில் நடந்த சம்பவம் – பொலிஸாரிடம் மாட்டிய கொள்ளையர்கள்..!

0
63

யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ். குற்றவிசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் யாழ் சுன்னாகம் பகுதியில் நேற்று (17) கைதான பிரதான சந்தேக நபரை இன்று (18) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கண்டியில் இன்று (18) கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here