சீன செயலியான TikTok அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது, முக்கிய ஆப் ஸ்டோர்களில் இருந்தும் அகற்றப்பட்டது. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (ஜனவரி-20) தாம் பதவியேற்ற பிறகு டிக்டாக் மீதான உத்தேசத் தடையை அநேகமாக 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அவ்வாறு செய்ய நான் முடிவெடுத்தால், அநேகமாக திங்கட்கிழமை அதை அறிவிப்பேன் எனவும் டிரம்ப் கூறினார்.
இதன் பின்னணியில், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று டிக்டாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, டிக்டாக் தடை உறுதி என அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சட்டத்திற்கு தடைகோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலி கணக்கு வைத்துள்ளனர் என பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும், இல்லை என்றால் தடை செய்யப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டாக் செயலி இன்று முதல் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி ஜோ பைடன் சட்டம் இயற்றியுள்ளார். டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டம் இயற்றவேண்டும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.