காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து கொ.ன்.ற காதலிக்கு நீதிமன்றம் தீர்ப்பு.!

0
22

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கேரள பகுதியில் அமைந்துள்ள பரசாலையைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற இளைஞர், கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த வழக்கில், ஷரோன் ராஜ் திடீரென நோய்வாய்ப்பட்டு 2022 இல் இறந்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணா தனது வீட்டில் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். தனது காதலன் ஷரோன் ராஜாவை வீட்டிற்கு அழைத்து பழச்சாற்றில் விஷம் கலந்து கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த குறித்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞனின் காதலி உட்பட தாய், உறவினர்கள், மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்குகளின் முடிவில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here