முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற இடம்பெற்ற பட்டத்திருவிழா.! Video

0
26

முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025 நேற்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு – வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந் நிலையில் சிறார்கள் முதல் பெரியோர்வரை இணைந்து இந்தப் பட்டம்விடும் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையெங்கும் அழகிய வண்ணப்பட்டங்கள் வானை அலங்கரித்தன.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திருமதி.இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here