முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தெற்குப் பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்த் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடிப் பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நேற்று (20) வேலை செய்து கொண்டு இருந்துள்ளது.
அந்தப் பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து அவர்களைத் துரத்தியுள்ளது. யானைக் கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியுள்ளனர். சிறு காயங்களுக்கு உள்ளன 10 பேரும் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிற்சை பெற சென்றனர், அதன் போது 3 பெண் பணியாளர்கள் தொடர்ந்தும் சிகிர்சை பெற்று வருகின்றனர்.