மஸ்கெலியாவில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்..!

0
169

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்வீக் தோட்ட பிரவுன்ஸ்வீக் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அதே தோட்டத்தை சேர்ந்த திருமணமான 32 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, தாத்தா அம்மாயின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார். எனினும் அச்சிறுமி, குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்கு, முதியோருக்கு தெரியாமல் அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

இது தொடர்பில், அயலவர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அந்த தோட்டத்துக்கு விரைந்து, குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here